Thursday, April 22, 2010

en kiraamam

என் கிராமம்

அன்று
சின்ன வயதில்
நான்
சுற்றி  திரிந்த  கிராமத்தில்!
தோழிகளுடன்
மாடுகளுக்கு
புல் அறுக்க
வயல் வரப்புகளில்
ஓடியாடியதும்!

தோழர்களுடன்
கிட்டிபுள்  விளையாடியதும்!

வீட்டு படிக்கட்டுக்களில்
ஏழு கல் ஆட்டமும்!
கிராம வீதிகளில்
பாண்டி  ஆடியதும்!

வீட்டு திண்ணைகளில்
தாயம் ஆட்டமும்!

ஆழ குளத்தில் 
நீச்சல் பழகியதும்!
 
இன்றும் என் நெஞ்சில்
நீங்கா இனிய நினைவுகள்!

ஆனால்
இன்று

அதே
கிராமத்திற்கு
சென்ற பொழுது

கிராம வீதிகளில்
ஆள் அரவம் இல்லை!

வீ ட்டு திண்ணைகள் குளம்  என்று ...
எங்கும் ...
வெறிச்சோடி கிடந்தன!

அட..

ஏன்!
என் கிராமத்திற்கு
என்னாயிற்று?

பதரிய படி
வீட்டிற்குள்
நுழைந்தால்

எல்லாரும் அமர்ந்திருந்தனர்
T . V  என்னும்
அந்த
குட்டி பிசாசின் முன்!
  

2 comments:

  1. அருமை!
    உண்மைதான்..
    கு(பெ)ட்டிப் பிசாசுகள் கொஞ்சங்கொஞ்சமாக கிராமங்களின் அடையாளங்களை விழுங்கி வருகின்றன.

    கொஞ்சம் எழுத்துப் பிழைகளில் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  2. kutti pisaasumattumillai athu oru muttaal petti!! enru tholaiyum intha saniyan ??!!??

    ReplyDelete