Tuesday, March 15, 2011

poonmozhikal

பொன் மொழிகள்

  1. புகழை விரும்பாத பொதுநலத் தொண்டனே உத்தமன்!
  2. கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும். தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்!
  3. மனிதனுடைய  அடிப்படையான பண்பு நன்மை செய்வதே!
  4. மனதில் சாந்தமும் அமைதியும் உள்ளவரே அஞ்சாமல் இருக்க முடியும்!
  5. தீயன செய்பவனைப் போலவே தீயன சிந்திப்பவனும் தீயவனே
  6. தைரியம் எண்ணற்ற எதிரியை வென்று விடும்!
  7.   உழைப்பை நம்பு! ஆனால் கடவுளை மறக்காதீர்!
  8. அன்பே கடவுள்!
  9. பொறுமை, நிதானம்  கடலினும் பெரிது! 
  10. உன்னை நம்பு. உலகம் உன் பின்னால் வரும்!

Thursday, April 22, 2010

en kiraamam

என் கிராமம்

அன்று
சின்ன வயதில்
நான்
சுற்றி  திரிந்த  கிராமத்தில்!
தோழிகளுடன்
மாடுகளுக்கு
புல் அறுக்க
வயல் வரப்புகளில்
ஓடியாடியதும்!

தோழர்களுடன்
கிட்டிபுள்  விளையாடியதும்!

வீட்டு படிக்கட்டுக்களில்
ஏழு கல் ஆட்டமும்!
கிராம வீதிகளில்
பாண்டி  ஆடியதும்!

வீட்டு திண்ணைகளில்
தாயம் ஆட்டமும்!

ஆழ குளத்தில் 
நீச்சல் பழகியதும்!
 
இன்றும் என் நெஞ்சில்
நீங்கா இனிய நினைவுகள்!

ஆனால்
இன்று

அதே
கிராமத்திற்கு
சென்ற பொழுது

கிராம வீதிகளில்
ஆள் அரவம் இல்லை!

வீ ட்டு திண்ணைகள் குளம்  என்று ...
எங்கும் ...
வெறிச்சோடி கிடந்தன!

அட..

ஏன்!
என் கிராமத்திற்கு
என்னாயிற்று?

பதரிய படி
வீட்டிற்குள்
நுழைந்தால்

எல்லாரும் அமர்ந்திருந்தனர்
T . V  என்னும்
அந்த
குட்டி பிசாசின் முன்!
  

Saturday, April 17, 2010

valga valamudan

வாழ்க வளமுடன்!                                                                

வாழலாம் வாங்க!
உலகத்தில் என்ன சிக்கல் இருந்தாலும்
வாழலாம் வாங்க!

எல்லார் தாலியும்
டாஸ்மாக் கடை
கள்ள பெட்டியில் அடகு!

ஒரு ரூபாய்க்கு அரிசி
போட்டாலும்
ஒரு நாளைக்கி நூரூ ரூபா                                                    
இருந்தாலும்
கஞ்சி குடிக்க முடியலை?

வீட்டில் சாப்பாடு இருக்கோ இல்லையோ
அவனவன் வயிற்றில் கட்டாயம்
 டாஸ்மாக்!

வீடு எப்படி விளங்கும்!
நாடு எப்படி துலங்கும்!

2020௦ இல் இந்தியா
வல்லருசு ஆகணுமாம்!

அன்னிக்கி பெரியார்
மதுவிலக்கு கொண்டு வந்தார்!
நாடு நல்லா இருந்தது?

இன்னிக்கி நல்லவங்க
டாஸ்மாக் கொண்டு வந்தாங்க!
வீடு நல்லாவா இருக்கு?



வேலை 1000